News August 12, 2025
விஜய் வாய் திறந்துவிட்டாரா? தமிழிசை கிண்டல்

எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து தமிழிசை, ‘பரவாயில்லையே ஒருவழியாக தம்பி விஜய் வாய் திறந்துவிட்டாரா’ என கிண்டலாக பதிலளித்தார். போராடும் தூய்மைப்பணியாளர்களை பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து விஜய் பேசியிருக்கிறார்; கூட்டம் வரும் கூட்டம் வரும்னு வெளிய வராம இருந்தா அப்புறம் எதுக்கு அவரு அரசியல் கட்சி தலைவர்? முதலில் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கட்டும் என்றார்.
Similar News
News August 12, 2025
மழைக்காலத்தில் இதெல்லாம் கண்டிப்பா பண்ணுங்க!

➤வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக குடை, ரெயின் கோட், ஜர்க்கின் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள்.
➤மெழுகுவர்த்தி, டார்ச் கையிருப்பில் இருப்பது நல்லது.
➤வீட்டில் வயதானவர்கள், குழந்தைகள் இருந்தால் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும்.
➤உடைந்த சேதமடைந்த மின்சார சாதனங்களை சரி செய்து கொள்ளவும்.
➤வீட்டை சுற்றி குப்பை இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது தொற்று நோய் பரவாமல் தடுக்கும்.
News August 12, 2025
வங்கியில் 750 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்த 20- 28 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ₹15,000/- வரை ஸ்டைபண்ட் வழங்கப்படும். வரும் 20-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். முழு தகவலுக்கு <
News August 12, 2025
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான <<17356042>>அபராத வட்டியை தள்ளுபடி<<>> செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக, வட்டி முதலாக்கத்தின் (interest on capitalization) மீது விதிக்கப்பட்டுள்ள வட்டியும் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலுவையை செலுத்திவிட்டு சொத்து விற்பனை பத்திரத்தை பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.