News August 12, 2025

திருவாரூர்: ரூ.90,000 சம்பளத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> வரும் ஆக.30-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 10, 2025

திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

image

பாஜக IT WING மாநில செயலாளர் சதீஷ்குமார் முகநூலில் திருப்பரங்குன்றம் சம்பந்தமாக பதிவிட்ட பதிவிற்காக கம்யூனிஸ்ட் கட்சியினர், அவரின் அலுவலகத்தில் புகுந்து தாக்க முற்பட்டதாகவு; இது தொடர்பாக பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களின் மீது வழக்கு பதிந்தும் இதுவரை கைது செய்யாமல் காவல்துறையினர் உள்ளதாகவும் கூறி, இன்று பேரளம் கடைதெருவில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News December 10, 2025

திருவாரூர்: சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடம்!

image

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படும் காவிரி ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் திருவாரூர் மாவட்டம், சோழ சாம்ராஜ்யத்தின் 5 பாரம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திருவாரூர் தலைநகரமாகவும், தியாகராஜர் கோயிலின் இருப்பிடமாக இருப்பதால், சைவ வளர்ச்சி மையமாகவும் திகழ்ந்துள்ளது. இதனால் திருவாரூர் சோழ சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்கியது.

News December 10, 2025

திருவாரூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.

error: Content is protected !!