News August 12, 2025
நெல்லை – பாளை தென்னிந்தியாவின் OXFORD!

நெல்லை மற்றும் பாளை ஆகிய இரண்டும் தாமிரபரணி ஆற்றால் பிரிக்கப்பட்ட “இரட்டை நகரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. ஆன்மிக சிறப்புகள் நிறைந்த நெல்லையப்பர் கோயில் திருநெல்வேலியில் உள்ளது. பாளையங்கோட்டை பல்வேறு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை கொண்டிருப்பதால், “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” என்று அழைக்கப்படுகிறது. இரு நகரங்களும் கலாசாரம், ஆன்மிகம், கல்வி என பல துறைகளில் கெத்தாக உள்ளது. SHARE பண்ணுங்க!
Similar News
News August 12, 2025
திருநெல்வேலி – பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கம்

ஆகஸ்ட் 17 மாலை 4.20க்கு திருநெல்வேலியில் புறப்படும் சிறப்பு ரயில், அம்பாசமுத்திரம் தென்காசி, சிவகாசி, மதுரை, திண்டுக்கல் வழியாக மறுநாள் 18ம் தேதி மதியம் 12.20க்கு பெங்களூரு சிவமொக்கா நிலையம் அடையும். ஆகஸ்ட் 18 மதியம் 2.15க்கு பெங்களூருவில் புறப்பட்டு, 19ம் தேதி காலை 10.15க்கு திருநெல்வேலி வரும். 3 ஏ.சி. பெட்டிகள் உட்பட 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
அம்பை அருகே அசத்தும் பெண் விவசாயி

அம்பை அருகே, ‘வாழிய நிலனே’ என்ற புறநானூறு பாடல் வரியை மனதில் கொண்டு, விவசாயி லட்சுமி தேவி இயற்கை விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். பாரம்பரிய நெல் ரகமான ‘சின்னார்’ வகையை தனது வயலில் பயிரிட்டு, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தி வருகிறார். லட்சுமி தேவியின் இந்த முயற்சி, நவீன விவசாய முறைகளுக்கு மத்தியில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க உதவுவதாக அமைந்துள்ளது. *SHARE IT
News August 12, 2025
பல் பிடுங்கிய வழக்கில் 4வது முறையாக எஸ்பி ஆஜராகவில்லை

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கு பொதுவாக மாதத்திற்கு ஒரு வாய்தா என்ற அடிப்படையில் நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது. ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் 2 வாய்தாக்களும், நடப்பு மாதத்தில் இதுவரை 2 வாய்தாக்களும் நடந்துள்ளன. மேலும் ஒரு வாய்தா விசாரணை இதே மாதத்தில் நடைபெற உள்ளது. ஆனால் பல்வீர்விங் 4வது முறையாக நேற்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.