News August 12, 2025
நாகையில் நாளை சிறப்பு முகாம்

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் நாளை (ஆக.12) நடைபெற உள்ளது. இம்முகாமில் விதை விதைக்கும் கருவி, டிரோன்கள் போன்ற நவீன வேளாண் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளன. இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள நாகை கலெக்டர் ஆகாஷ் அழைப்பு விடுத்துள்ளார். SHARE NOW!
Similar News
News August 12, 2025
நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 15-ந் தேதி நாகை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அனுமதி பெற்று செயல்படும் மதுபான கூடங்கள் ஆகியவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி அன்றைய தினம் மதுவிற்பனையில் யாரேனும் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரித்துள்ளார்.
News August 12, 2025
நாகை: B.E முடித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <
News August 12, 2025
நாகையில் 354 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 354 கிலோ கஞ்சா போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, இதுதொடர்பாக 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.