News August 12, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டையில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஆக.,12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன்படி, மாத்தூர், புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்ப்பட்டி, திருமலை சமுத்திரம், நமணசமுத்திரம், திருவரங்குளம், லேணாவிளக்கு, இலுப்பூர், வீரப்பட்டி , மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், பாக்குடி, ராப்பூசல் மற்றும் புதுக்கோட்டை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News August 12, 2025
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று (ஆக., 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News August 12, 2025
32 பதக்கங்களை வென்று புதுகை மாணவர்கள் சாதனை

புதுக்கோட்டை சிவபுரத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை நடத்திய ஆண்கள் பிரிவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 10 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி பதக்கங்கள், 12 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 32 பதக்கங்களை வென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். மேலும் தங்கப்பதக்கம் பெற்ற 10 பேர் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
News August 12, 2025
புதுக்கோட்டை: B.E முடித்தவர்களுக்கு வேலை!

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <