News August 12, 2025
கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி

திருவண்ணாமலை காந்திநகர் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன் மற்றும் பணியாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து மூவரையும் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News August 12, 2025
திருவண்ணாமலை தடகள மாணவிகளே தயாராகுங்கள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (13-08-2025) தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் திருவண்ணாமலை குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பங்கு பெறலாம் முதல் 3- இடம் பிடிக்கும் மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
News August 12, 2025
தி.மலை மக்களே…கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

தி.மலை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News August 12, 2025
திருவண்ணாமலை 3 அரசு பள்ளிக்கு பூட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 அரசு பள்ளிகள் தற்போது மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 207அரசு பள்ளிகளில் ஒரு மாணவ மாணவிகள் கூட (பூஜ்ஜியம்) பள்ளியில் சேர்வதற்கு முன் வராத நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அந்த 207பள்ளிகளை முற்றிலுமாக மூடுவதாக தமிழக அரசு முடிவு எடுத்து உள்ளது. அதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.