News August 12, 2025

மதுபான கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளார். உத்தரவை மீறும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Similar News

News August 12, 2025

ஆரஞ்சு அலெர்ட்: திருவள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை!

image

வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 12) திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News August 12, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (11/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 12, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர், பூவிருந்தவல்லியில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. “புத்தக்கட்டுநர்” பிரிவில் (ஆண்கள்/பெண்கள்) இந்த ஓராண்டுப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தரமான உணவுடன் கூடிய விடுதி வசதியும் உள்ளது. பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!