News August 12, 2025
மயிலாடுதுறை: குறும்பட போட்டியில் வென்றவர்க்குக்கு சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், காசோலையை வழங்கினார்.
Similar News
News August 12, 2025
மயிலாடுதுறையில் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் நலனை காக்கும் பொருட்டு அவர்கள் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை 29 வது வார்டு பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு 29 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரஜினி அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று குடிமை பொருட்களை வழங்கினார்.
News August 12, 2025
வங்கிப் பணிக்கான எழுத்துத் தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

எஸ்பிஐ கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் மற்றும் டிஎன்பிஎஸ்சி தொகுதி 2/2 ஏ ஆகிய எழுத்து தேர்வு வாயிலான காலி பணியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை தயார் செய்யும் விதம் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகிற 14-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. 9499055904 என்ற வாட்ஸ்அப் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
மயிலாடுதுறை: ரூ.90,000 சம்பளத்தில் வேலை! APPLY

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <