News August 12, 2025

திருச்சி: காவல் செயலி குறித்து விளக்கும் நிகழ்ச்சி

image

திருச்சி மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு “காவல் உதவி செயலி” குறித்து விளக்கும் நிகழ்ச்சி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வனிதா கலந்துகொண்டு, காவல் உதவி செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கி பேசினார். இதில் தபால் நிலைய அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News

News August 12, 2025

திருச்சி டிஐஜி வருண்குமார் பணியிட மாற்றம்

image

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி, பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி-யாக பொறுப்பு வகித்து வந்த வருண்குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW !

News August 11, 2025

திருச்சி: மனநல மையங்கள் பதிவு செய்ய காலக்கெடு

image

திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்புச் சட்டம் 2017-ன் படி முறையான உரிமம் பெற்று இயங்க வேண்டும். உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள், சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில மன நல ஆணையத்தில் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

திருச்சியில் பிறந்த பிரபலங்களை பற்றி தெரியுமா?

image

திருச்சியில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

✅ பாடலாசிரியர் வாலி,
✅ எழுத்தாளர் சுஜாதா
✅ நடிகர் நெப்போலியன்,
✅நடிகர் சிவகார்த்திகேயன்,
✅ நடிகர் பிரசன்னா,
✅நடிகர் கவின்,
✅இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
✅ இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
✅ நடிகை ரேணுகா
✅அனு ஹாசன்
✅கிரிஷ்
✅கல்கி சதாசிவம்

நம்ம திருச்சிக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்

error: Content is protected !!