News August 12, 2025

இல.கணேசனுக்கு 3-வது நாளாக தீவிர சிகிச்சை

image

நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8-ந்தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் 3-வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்கை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Similar News

News August 12, 2025

FLASH: சென்னையில் உயிரை பறித்த NEET தேர்வு

image

சென்னை கொடுங்கையூரில் NEET தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவி மதனஸ்ரீ (17) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். NEET தேர்வால் தற்கொலைகள் தோஈடர்ன்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

News August 12, 2025

சென்னை மக்களுக்கு முக்கிய தகவல்… நோட் பண்ணிக்கோங்க

image

சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 11) 55 புதிய மின்சார AC பேருந்துகள் தொடங்கப்பட்டன. விமான நிலையம் – சிறுசேரி வரை 15, கிளாம்பாக்கம் – திருவான்மியூர் வரை 5, கிளாம்பாக்கம் – சோழிங்கநல்லூர் வரை 5, தி.நகர் – திருப்போரூர் வரை 5, பிராட்வே – கேளம்பாக்கம் வரை 5, கோயம்பேடு – கேளம்பாக்கம் அல்லது சிறுசேரி வரை 20 என இயக்கப்பட உள்ளன. மேலே உள்ள படத்தை 2 முறை தொடுங்கள் முழு விவரம் இருக்கும். அனைவருக்கும் ஷேர் செய்யுங்க

News August 12, 2025

தாம்பரம்: விமானப் படையில் ஆட்சேர்க்கை

image

அக்னிவீர் திட்டத்தில் இந்திய விமானப் படைக்கு ஆட்சேர்ப்பு வரும் செப்டம்பர் 2 முதல் 5ம் தேதி வரை தாம்பரம் விமானப் படை நிலையத்தில் நடக்க உள்ளது என சென்னை கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். பிளஸ்-2ல் 50% தேர்ச்சியுடன் 18 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆட்சேர்க்கையில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களை www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!