News August 11, 2025
நெல்லை மாநகரில் 8 மாதங்களில் 11 கொலைகள்

நெல்லை மாநகரில் கடந்த 8 மாதங்களில் 11 கொலைகள் நடந்துள்ளன. கே.டி.சி.நகரில் நடந்த கவின் ஆணவக்கொலை மற்றும் நெல்லை டவுனில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. போலீசார் கூறுகையில், பெரும்பாலான கொலைகள் திடீர் மோதல்களால் நிகழ்ந்தவை, முன்விரோதமோ பழிக்குப்பழியோ இல்லை. குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு, கொலைகள் குறைந்துள்ளதாகவும், பல கொலைகள் தடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
Similar News
News November 12, 2025
நாங்குநேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் காயம்

நாங்குநேரி அருகே உள்ள பகுதியில் இன்று மதியம் 2 மணி அளவில் வேன் நான்கு வழி சாலை அருகே உள்ள இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக சென்று கொண்டிருந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கால அட்டவணை வெளியீடு

தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியும் உத்தரவு படியும் திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற ஒன்று ஒன்று 2026ம் ஆண்டு தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளுக்கான கால அட்டவணைகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கிறார். அதன்படி வருகின்ற கணக்கெடுப்பிற்கான காலம் வாக்குச்சாவடி மறு வரையறை வாக்காளர் பட்டியல் என கால நிர்ணயம்.
News November 12, 2025
BREAKING நாய் கடித்த நெல்லை இளைஞர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(31). இவர் காவல்கிணறு பகுதியில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை நாய் கடித்தது. இதற்கு அவர் சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


