News August 11, 2025

குமரி மாவட்ட குறைதீர் நாள் நிகழ்ச்சியில் 285 மனுக்கள்

image

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 285 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

Similar News

News August 12, 2025

நாகர்கோவிலில் 4850 கிலோ மஞ்சள் ஏலம்

image

குமரி மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு – நித்திரவிளை காவல் நிலைய குற்ற வழக்கின் சொத்தான 4850 கிலோ மஞ்சள் இன்று (ஆக.12 ) காலை 11 மணிக்கு ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொது ஏலம் விடப்படுகிறது. பொது இடத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் ஏல முன்தொகை 500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்த நபர்கள் ஏலத் தொகையுடன் ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து பணமாகச் செலுத்த வேண்டும் .

News August 11, 2025

குமரி மாவட்டத்தில் தொழில் தொடங்க பயிற்சி

image

குமரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளிகப்படுகிறது. பால் பண்ணை, ஆடு, கோழி வளர்ப்பு தொழில் செய்ய விரும்புவோர், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வழங்கப்படும் இந்த 20 நாள் பயிற்சியை பெற்று பயன் பெறலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு. மேலும் தகவலுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இதை, கால்நடை வளர்ப்பு தொழில் தொடங்க ஆர்வமுள்ள உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க

News August 11, 2025

குமரி: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி – ஆட்சியர்!

image

குமரியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி ஆகஸ்ட்.22ம் தேதி முதல் செப்டம்பர் 12 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க http://sdat.tn.gov.in (0) http://cmtrophy.sdat.in இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள்: ஆக.16. மேலும் இப்போட்டியில் இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!