News August 11, 2025

சிவகிரி அருகே இளம்பெண் தற்கொலை

image

சிவகிரி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்த துளசி(26), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். உடல்நிலை காரணமாக ஊருக்கு வந்தவர், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். சிவகிரி இன்ஸ்பெக்டர் முரளீதரன், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Similar News

News August 12, 2025

தமிழ் செம்மல் பெறுவதற்கான விண்ணப்பம் – ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் 2025ஆம் ஆண்டு தமிழ் செம்மல் விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.in.gov.in-இல் தெரிந்து கொள்ளலாம். அலுவலக வளாகத்தில் செயல்படும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 28.08.2025க்குள் கிடைக்கும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0462-2502521

News August 12, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (11.08.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம் தென்காசி புளியங்குடி சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

தீயணைப்பு நிலையங்களில் போதை ஒழிப்பு உறுதிமொழி

image

தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் உத்தரவின் பேரில் இன்று (11.08.2025) தென்காசி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பாக தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில் , வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

error: Content is protected !!