News August 11, 2025
திருவள்ளுவர் பல்கலையில் பட்டமளிப்பு விழா – ஆளுநர் பங்கேற்பு

காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 20ம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் ஆக.19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்கள் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 11, 2025
வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால் இன்று (ஆக.11) இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
News August 11, 2025
வேலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை

வேலூர் மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக உருவாக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், இன்று (ஆக.11) மாவட்டம் முழுவதும் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் 265 மது பாட்டில்கள், 18 பீர் பாட்டில், கர்நாடக மாநில 50 மது பாக்கெட்டுகள், 50 லிட்டர் கள்ளச்சாராய ஊரல், 3 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News August 11, 2025
வேலூரில் மனித கழிவுகளை அகற்ற இனி ரோபோக்கள்

வேலூர் மாநகராட்சியில், மனித கழிவுகளை அகற்றும் பணியில் இனி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த வேலையைச் செய்ய ரோபோட்டிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்கள் பணியாளர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும். விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.