News August 11, 2025
ராணிப்பேட்டை: போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.11) போலீசார் தீவிர போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதில் 139 போதைப்பொருள், 84 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2,860 கிலோ கஞ்சா, 802.80 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News August 11, 2025
பாலாறு மாசுபடுவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலாறு மாசுபடுவது குறித்து தன்னார்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவு போட்டது. அதன்படி மூன்று மாவட்ட ஆட்சியர்களும் இன்று (ஆக.11) உச்சநீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், பாலாறு மாசுபடுவதை தடுக்கும் நடவடிக்கைகளை சவாலாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
News August 11, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் இன்று (ஆக.11) இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்காக கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
News August 11, 2025
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா விடுத்துள்ள செய்தி குறிப்பில்; கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குகிறது. அந்த வகையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக சிறப்பு ஊக்கத்தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.