News August 11, 2025

செங்கல்பட்டு மக்களே! கொஞ்சம் சூதானமா இருங்க…

image

ஷாப்பிங் மால், திரையரங்கம், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது செல்போன் நம்பரை கேட்பது வழக்கம். நாமும் யோசிக்காமல் நம்பரை தருகிறோம். இதனால் தேவையில்லாத போன் கால், SPAM கால் வர வாய்ப்புள்ளது. Ministry of Consumer Affairs-2023 படி கட்டாயப்படுத்தி நம்பர் வாங்குவது குற்றம். மீறினால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம். எனவே நம்பர் தரவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஷேர் பண்ணுங்க

Similar News

News August 12, 2025

ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொறுப்பு ஏற்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியராகப் பணியாற்றி வந்த நாராயண சர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பி.ஸ்ரீதேவி இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்றார். பின்னர், அவர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதேவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

News August 11, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 11) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 11, 2025

செங்கல்பட்டு: M.Ed. படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் (M.Ed.) 300 இடங்கள் உள்ளன. நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஆகஸ்ட் 11) முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20, 2025. ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!