News August 11, 2025
காஞ்சிபுரம்: திருமணத் தடை நீக்கும் கோயில்!

காஞ்சிபுரத்தில் விஜயராகவ பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இது 57வது கோயிலாகும். இது 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோயில் கட்டிடக்கலை காஞ்சிபுரத்தில் காணப்படும் பாரம்பரிய கோயில்களைப் போன்றது. குழந்தைப் பேறு வேண்டுபவர்கள், திருமணம் நடக்க வேண்டும் என்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நிச்சயம் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். (SHARE)
Similar News
News August 12, 2025
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற ஆட்சியர்

இன்று (ஆகஸ்ட் 11) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.
News August 12, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (11.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 12, 2025
காஞ்சிபுரம்: தேர்விற்கான இலவச பயிற்சி அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட
49 காலிப்பணியிடங்களுக்குமான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 18ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் துவக்கம் என அறிவிக்கப்பட்டது.