News August 11, 2025
யஷ் தயாளுக்கு தடையா?

பாலியல் பலாத்கார <<16987106>>வழக்கில்<<>> சிக்கியுள்ள RCB வீரர் யஷ் தயாளுக்கு உ.பி., கிரிக்கெட் சங்கம் (UPCA) தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 17-ம் தேதி தொடங்கவுள்ள UP T20 தொடரில் விளையாட அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த தொடரில் கோரக்பூர் லயன்ஸ் அணிக்காக விளையாட ₹7 லட்சத்துக்கு தயாள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும், இதுகுறித்து அந்த அணி தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.
Similar News
News August 12, 2025
தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம்: SP வேலுமணி

மாநகராட்சியில் குடியேறும் போராட்டம் என்ற பெயரில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு தீர்வு காணவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டுமென EX அமைச்சர் SP வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்தார்.
News August 12, 2025
SK-வுடன் ஜோடி சேரும் மிருணாள் தாக்கூர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் விரைவில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது முடிவடைந்துவிட்டதாகவும், இதில் சிவகார்த்திக்கேயன் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இப்படத்தில் மிருணாள் தாக்கூரை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
News August 12, 2025
வரும் IPL ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு போவார்கள்?

IPL மினி ஏலம் 2026 ஜனவரி மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு போவார்கள் என சில கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி சஞ்சு சாம்சன், இஷான் கிசான், வெங்கடேஷ் ஐயர், கேம்ரூன் க்ரீன் ஆகியோர் இந்தமுறை ஏலத்துக்கு வரவாய்ப்புள்ளதாகவும், இவர்கள் சுமார் 20 கோடிக்கு மேல் ஏலத்துக்கு போவார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.