News August 11, 2025
மயிலாடுதுறை: உங்கள் ஊரிலேயே அரசு வேலை, Apply Now

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News August 12, 2025
மயிலாடுதுறையில் உலகப்புகழ்பெற்ற பொருள்!

சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராமத்தில் பாரம்பரியமாக செய்யப்படும் தைக்கால் பிரம்பு உலகப்புகழ்பெற்ற கலைப்பெருளாகும். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பல தலைமுறைகளாக பிரம்பைக் கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்குக்கி வருகின்றனர். இதில் நாற்காலிகள், ஊஞ்சல்கள் போன்றவை மிகவும் பிரபலமானவை. இந்த கலைநயத்தை போற்றும் வகையில் இதற்கு புவிசார் குறியீடு தரப்பட்டுள்ளது. நம்ம ஊரு பெருமைகளை ஷேர் பண்ணுங்க
News August 12, 2025
மயிலாடுதுறை: குறும்பட போட்டியில் வென்றவர்க்குக்கு சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், காசோலையை வழங்கினார்.
News August 12, 2025
தன் விருப்ப நிதியிலிருந்து தையல் இயந்திரம் வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து பயனாளி ஒருவருக்கு ரூபாய் 8650 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.