News August 11, 2025
இனி படிப்பது ரொம்ப ஈசி.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மாணவர்கள், ஆசிரியர்களுக்காக புதிய சமுதாய வானொலி நிலையத்தை CBSE தொடங்கவுள்ளது. ஏற்கனவே ‘ஷிக்ஷா வாணி’ பாட்காஸ்ட் மூலம் பாடங்கள் ஆடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், NCERT பாடத்திட்டத்தின்படி, பாடங்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. புதிய வானொலி நிலையம் தொடங்கப்பட்டதும், மாணவர்களின் கற்றலை மேலும் எளிதாக்கும் வகையில் பாடங்கள் ஒளிபரப்பாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களே ரெடியா..!
Similar News
News August 11, 2025
வீடு தேடி வரும் ரேஷன்.. தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சோதனை அடிப்படையில் 10 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்த இந்த திட்டம் நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், மூத்த குடிமக்கள் 15.81 லட்சம், மாற்றுத் திறனாளிகள் 20.42 பேர் பயனடைய உள்ளனர்.
News August 11, 2025
IPS அதிகாரிகள் பணியிட மாற்றம்

4 IPS அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜியாக இருந்த வருண் குமார், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை கமாண்டண்டாக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணப்பிரிவு ஐஜியாக ஜெயஸ்ரீ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஆயுஷ் திவாரி டேன்ஜெட்கோவிற்கு பணியமர்த்தப்பட்டுள்ளார்.
News August 11, 2025
5 பந்துகளில் அபார வெற்றி… அசத்தல்!

U-19 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றில், ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அர்ஜென்டினா – கனடா இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அர்ஜென்டினா அணி 19 ஓவர்கள் விளையாடி வெறும் 23 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கனடா பவுலர் ஜக்மதீப் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தினார். சிறிய இலக்கை விரட்டிய கனடா அணி, வெறும் 5 பந்துகளில் 24 ரன்கள் குவித்து வெற்றியை பதிவு செய்தது.