News August 11, 2025
செங்கல்பட்டு: M.Ed. படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் (M.Ed.) 300 இடங்கள் உள்ளன. நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஆகஸ்ட் 11) முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20, 2025. ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
Similar News
News December 10, 2025
செங்கல்பட்டு: அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவு!

சரவம்பாக்கத்தைச் சேர்ந்த வாசுதேவன் 15ஆண்டுகளுக்கு முன் விபத்தில் பலியானார்.அவரது மனைவி பிரேமா தொடர்ந்த வழக்கில், குடும்பத்திற்கு ரூ.35.35 லட்சம் இழப்பீடு வழங்க மதுராந்தகம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காததால், விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்ற ஊழியர்கள் மதுராந்தகத்தில் நின்றிருந்த அந்தப் பேருந்தை ஜப்தி செய்தனர்.
News December 10, 2025
செங்கல்பட்டு: ட்ரைவர் மீது பஸ் மோதி விபத்து

சிங்கப்பெருமாள் கோயில் அருகே விஞ்சியம்பாக்கம் பகுதியை சேர்ந்த டிரைவரான கண்ணன் மல்ரேசாபுரம் அருகே பைக்கில் சாலையை கடக்க காத்திருந்தார். அப்போது செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற பேருந்து கண்ணன் பைக் மீது மோதியது. இதில் கண்ணன் படுகாயமடைந்தார். அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்கள் ட்ரைவரை சிறைபிடித்து போராட்டம் செய்தனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News December 10, 2025
செங்கல்பட்டு: பள்ளி மாணவருக்கு வீட்டில் நடந்த சோகம்!

மாங்காடு அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் பணிபுரியும் பிரபுவின் மகன் கீர்த்தன் (9-ஆம் வகுப்பு), தன் தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து அறைக்குச் சென்ற கீர்த்தன், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் தாய் சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, விசாரணை செய்கின்றனர்.


