News August 11, 2025

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு!

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், இன்று ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொலி காட்சியின் வாயிலாக சென்னையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் இராஜேந்திரன் பங்கேற்றார்.

Similar News

News August 11, 2025

தோல் வியாதியை குணமாக்கும் சேலம் கோயில்!

image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். தோல் வியாதிகளால் அவதிப்படுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 11, 2025

சேலத்தில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

image

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️வீராணம் – கோவிந்தக்கவுண்டர் சுசீலா திருமண மண்டபம் வீராணம் ▶️தாரமங்கலம் – சிவகாமி அம்மாள் திருமண மண்டபம் மற்றும் நெசவிளக்கு கிராம ஊராட்சி வள மைய கட்டிடம்▶️ காடையாம்பட்டி – வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மகாலட்சுமி நகர் மற்றும் கொங்குபட்டி கௌரநாயுடு சமுதாயக்கூடம்.

News August 11, 2025

சேலம்: 8வது போதும்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

சேலம் மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT

error: Content is protected !!