News August 11, 2025

இன்றே கடைசி: AIIMS-ல் 3,500 பணியிடங்கள்

image

நாடு முழுவதும் உள்ள AIIMS ஹாஸ்பிடல்களில் 3,500 நர்ஸிங் ஆபிஸர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். B.Sc Nursing அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி கொண்டவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 முதல் 30. SC/ST-க்கு 5 ஆண்டுகளும், OBC-க்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. Preliminary தேர்வு வரும் செப்.14, Mains தேர்வு செப்.27 நடைபெறும்.

Similar News

News August 11, 2025

தோனி வாக்குமூலம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

₹100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞரை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. IPL சூதாட்ட வழக்கு தொடர்பாக தனக்கு எதிராக அவதூறு கருத்து கூறியதாக IPS அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியாவுக்கு எதிராக 2014-ல் தோனி வழக்கு தொடர்ந்திருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், நீதிபதி CV கார்த்திகேயன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News August 11, 2025

கர்நாடகா அமைச்சர் ராஜினாமா? இதுதான் காரணம்!

image

கர்நாடக அமைச்சர் ராஜண்ணா <<17370523>>ராஜினாமா<<>> செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸின் ‘வாக்குத்திருட்டு’ போராட்டம் பற்றி பேசிய அவர், மஹாதேவ்புராவில் நடந்த சம்பவம் மாநிலத்தில் காங்., ஆட்சியில் இருக்கும்போதே நடந்துள்ளது. நம் கண்முன்னே இந்த முறைகேடு நடந்துள்ளதற்கு கட்சி வெட்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார். அவரை பதவி விலகச் சொல்லி காங்., மேலிடத்தில் இருந்து அழுத்தம் வர, இந்தப் பேச்சு தான் காரணமாம்.

News August 11, 2025

கூலி ஃபீவர்.. விடுமுறையை அறிவிக்கும் கம்பெனிகள்!

image

‘கூலி’ படம் ரிலீஸாக இருப்பதால், ரஜினியின் தரிசனத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில், ரிலீஸ் நாளான ஆக. 14 அன்று, சில நிறுவனங்கள் விடுமுறையை அறிவித்துள்ளன. மதுரையை சேர்ந்த ‘Uno aqua care’ நிறுவனம் ஏற்கெனவே விடுமுறையை அறிவித்தது. இந்நிலையில், சிங்கப்பூரில் ‘FARMER CONSTRUCTIONS PTE LTD’ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறையை அறிவித்துள்ளது. எங்கும் ‘கூலி’ ஃபீவர்தான்!

error: Content is protected !!