News August 11, 2025

BREAKING: விழுப்புரம் மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

image

விழுப்புரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுள்ள மாணவர்கள் கவனமாக வரவும். வெளியே செல்லும் குடை, ரெயின் கோர்ட் எடுத்து செல்லவும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News August 11, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்டு 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

குடிமனைப் பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை

image

மயிலம் அருகே தி.கேணிப்பட்டு கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் சிறுபான்மையினராக வசித்து வருகின்ற நத்தம் புறம்போக்கு நிலம் இருக்கின்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கண்ட இடத்தில் தான் இம்மக்கள் வசித்து வந்ததாக குறிப்பிடுகின்றனர் இந்த இடத்தில் குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென பட்டியல் சமூகத்தினர் மக்கள் இன்று (ஆக11) மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் .

News August 11, 2025

விழுப்புரம் – முண்டியம்பாக்கம் ரயில் ரத்து

image

தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், முண்டியம்பாக்கத்துடன் ரத்து செய்யப்பட்டுள்ளது, மறுமார்கத்தில் விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் முண்டியம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆக.23 அன்று மட்டும் இந்த பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!