News August 11, 2025
புதிய வாரிசை களமிறக்கிய ராமதாஸ்

ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியதால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. இந்நிலையில், அன்புமணிக்கு பதிலாக ராமதாஸ் புதிய வாரிசை அரசியலில் களமிறக்கியுள்ளார். நேற்று நடந்த பாமக மகளிர் மாநாட்டில் ராமதாஸுடன் மகள் காந்திமதியும் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல், ராமதாஸின் மகள் வழிப்பேரன் முகுந்தனின் சகோதரர் சுகுந்தனும் பங்கேற்றது அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.
Similar News
News August 11, 2025
காரைக்குடியில் செப்டம்பர் மாத உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காரைக்குடி மாநகராட்சியில் வரும் செப்டம்பர் மாதத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதிகள் பின்வருமாறு. 09.09.25 – சங்கராபுரம் வார்டு 10,13,14,15 – பெரிச்சியம்மன் கோவில் அருகே சமுதாய கூடம். 16.09.25 & 17.09.25 – சங்கராபுரம் 9,11,12 – காந்தி நகர் சமுதாய கூடம். 23.09.25 – இலுப்பைக்குடி ஊராட்சி – லெட்சுமி நகர் சமுதாய கூடத்தில் நடைபெறுகிறது.
News August 11, 2025
ஜெ., போட்டோவுடன் இருந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்

ஜெயலலிதாவை போல அரசியலில் ஆளுமை மிக்க பெண் என்ற எண்ணத்திலேயே <<17369072>>LK சுதீஷ், ஜெ.,வுடன் சேர்த்து<<>> தனது போட்டோவை பகிர்ந்ததாக பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம் தனது அரசியல் ரோல் மாடல் ஜெயலலிதாதான் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ள அவர், இதனை கூட்டணியுடன் முடிச்சி போட வேண்டாம் என்றார். காலையில், அதிமுக கூட்டணிக்குள் தேமுதிக இணைந்ததை மறைமுகமாக கூறவே சுதீஷ் இந்த போட்டோவை பகிர்ந்ததாக பேச்சு எழுந்தது.
News August 11, 2025
கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. நெருக்கடியில் ஹர்திக்?

Asia cup-ல் VC-யாக கில் நியமிக்கப்படுவது, ஹர்திக் பாண்ட்யாவுக்கு நெருக்கடியை உருவாக்கலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சூர்யகுமார் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவருக்கு பதிலாக ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அவர் இத்தொடரில் சொதப்பினால், சூர்யகுமார் கேப்டனாகவும், கில் VC-யாகவும் நியமிக்கப்படலாம். இது ஹர்திக்குக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கலாம்.