News August 11, 2025

நாமக்கல் மாவட்டத்தில் மின் தடை!

image

நாமக்கல் மாவட்டத்தில் ஆனங்கூர், தோக்கவாடி, கல்வி நகர், குப்புச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை(ஆக.12), மல்லசமுத்திரம், கவுண்டம்பாளையம், பாலமேடு, மங்களம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், வேப்பநத்தம், கொசவம்பட்டி, முதலைப்பட்டி, முத்துகாப்பட்டி, பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் ஆக.13 என மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.(SHARE)

Similar News

News August 11, 2025

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News August 11, 2025

நாமக்கல் வரும் வெளியூர் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கல் ரயில் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பணிகள் மற்றும் வியாபார விஷயமாக வருபவர்கள் தங்கி செல்ல ஏதுவாக புதிதாக ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது . ஓய்வு அறை அமைக்கப்பட்ட பின் வெளியூர் பயணிகள் குறைந்த கட்டணத்தில் ரயில்வே நிலையத்திலேயே தங்கி ஓய்வெடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 11, 2025

நாமக்கல்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

image

நாமக்கல் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9445851912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!