News August 11, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2,901 பேர் கைது!

image

நாகை மாவட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சட்டவிரோத மதுக்கடத்தல், கள்ளச்சாராயம் விற்றல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 2,901 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 23,769 லிட்டர் புதுச்சேரி சாராயம் மற்றும் 7,123 புதுச்சேரி மது பாட்டில்கள் கைப்பற்றி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 11, 2025

நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (ஆக.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

News August 11, 2025

நாகை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

image

நாகை மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 18 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை சம்பளம் வழங்கப்படும். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

நாகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு; ஆட்சியர் அழைப்பு

image

நாகை மாவட்டம் அரசினர் ITI வளாகத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இன்று (ஆக.11) காலை 10 மணி அளவில் நடைப்பெற உள்ளது. எனவே இதில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!