News August 11, 2025
திருச்சியில் மின்தடை அறிவிப்பு

திருச்சி மெயின்கார்ட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.,12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி, கரூர் பைபாஸ்ரோடு, சிந்தாமணி, ஓடத்துறை, சிங்காரத்தோப்பு, உறையூர் ஹவுசிங் யூனிட், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், பழூர், ஜீயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News August 11, 2025
திருச்சி: BHEL நிறுவனத்தில் வேலை.. கடைசி வாய்ப்பு

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘515’ கைத்திறத் தொழிலாளர் (Artisans) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த, விருப்பம் <
News August 11, 2025
திருச்சி: உறுதிமொழி எடுத்து சான்றிதழ் பெறுங்க

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை திருச்சி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன் என்ற உறுதிமொழியை எடுத்து https://drugfreetamilnadu.tn.gov.in/en#pledgeஇல் சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்.
News August 10, 2025
திருச்சியில் 896 வழக்குகள் பதிவு

திருச்சியில் நடப்பாண்டில் போதை விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் (ம) கடத்துபவர்கள் மீது 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 939 நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களிடமிருந்து 5005.6 கிலோ புகையிலை பொருட்களும்,12 இருசக்கர வாகனம், 8 நான்கு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் 5 நபர்கள் மீது குண்டர் தடுப்பு பதியப்பட்டுள்ளதாக திருச்சி எஸ்.பி தகவல் தெரிவித்துள்ளார்.