News August 11, 2025
மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு

திருவனந்தபுரத்திலிருந்து 5 MP-க்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னையை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், உடனே சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர்.
Similar News
News August 11, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. தமிழ் எப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
2. சூரியனில் எந்த வாயு அதிகமாக உள்ளது?
3. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
4. மனித உடலில் எந்த உறுப்பு, வெப்பநிலை பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது?
5. உங்களுக்கு சொந்தமானது, ஆனால் பிறர் அதிகமாக பயன்படுத்துவார்கள்.. அது என்ன? பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 11, 2025
கமலை விட அதிகமாக கெட்டப் போடும் லோகி!

லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகர் என்பதால், அவரையே மிஞ்சும் அளவிற்கு நிஜ வாழ்வில் பல கெட்டப்பை போட்டு வருகிறார். ‘கூலி’ பட நிகழ்ச்சியில் நீண்ட முடி, தாடியுடன் காணப்பட்ட அவர், தற்போது தனது மீசையை ஷேவ் செய்து விட்டார். இந்த கெட்டப்பில் அவரை பார்த்த நெட்டிசன்கள், இது முகமது லோகி என கமெண்ட் செய்து வருகின்றனர். லோகேஷ் விரைவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
News August 11, 2025
புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கல்

கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய 2025 வருமான வரி மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. தற்போது வரி செலுத்துவோருக்கு பயன் தரும் வகையில், திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை இன்னும் சற்றுநேரத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். TDS, TCS-ஐ விரைவாகவும், எளிதாகவும் மாற்றும் வகையிலும், வீட்டுக் கடனுக்கான வட்டி டிடக்ஷனில் கூடுதல் பலன் போன்ற பல மாற்றங்களுடன் புதிய மசோதா தாக்கலாகிறது.