News August 11, 2025

தென்காசியில் நாளை மின்தடை

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை (12.8.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Similar News

News August 11, 2025

தென்காசி: வீட்ல கரண்ட் இல்லையா? இதை பண்ணுங்க…

image

தென்காசி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 11, 2025

தென்காசி: மிஸ் பண்ணாதீங்க.. நாளை கடைசி நாள்!

image

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மாத சம்பளம் – ரூ.15,100 முதல் ரூ.35,100 வரை. 21 வயது நிரம்பிய தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக. 12) கடைசி நாள் என்பதால், விண்ணப்பிக்கதோர் உடனே<> இந்த தளத்தின் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 11, 2025

போதைப் பொருளுக்கு நாளை எதிரான விழிப்புணர்வு

image

தென்காசி, புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கூட்டரங்கில் நாளை காலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!