News August 11, 2025
இந்த முறை கப் நமக்கு தான்: கங்குலி

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். துபாய் ஆடுகளங்களில் இந்தியாவை வீழ்த்துவது கடினமான விஷயம் எனவும், கோலி, ரோஹித் ODI-களில் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்திருப்பதால், அவர்களுக்கு BCCI தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், கில் எதிர்காலத்தில் ரசிகர்களின் நம்பிக்கையை சுமந்து செல்லும் கேப்டனாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
புதிய வாரிசை களமிறக்கிய ராமதாஸ்

ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியதால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. இந்நிலையில், அன்புமணிக்கு பதிலாக ராமதாஸ் புதிய வாரிசை அரசியலில் களமிறக்கியுள்ளார். நேற்று நடந்த பாமக மகளிர் மாநாட்டில் ராமதாஸுடன் மகள் காந்திமதியும் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல், ராமதாஸின் மகள் வழிப்பேரன் முகுந்தனின் சகோதரர் சுகுந்தனும் பங்கேற்றது அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.
News August 11, 2025
SPORTS ROUNDUP: ஈட்டி எறிதலில் IND வீராங்கனை முதலிடம்!

◆உலக தடகள கான்டினென்டல் டூர்: ஈட்டி எறிதலில் IND வீராங்கனை அன்னு ராணி முதலிடம்.
◆2வது ODI: 37 ஓவரில் PAK 171/7 எடுத்த போது மழை குறுக்கிட்டது. 181 டார்கெட்டை துரத்திய WI, 33.2 ஓவரில் 184/5 எடுத்து வெற்றி.
◆சின்சினாட்டி ஓபன்: சபலென்கா(பெலாரஸ்) & ரிபாகினா(கஜகஸ்தான்) 3வது சுற்றுக்கு முன்னேற்றம்.
◆IPL 2026: தமிழக வீரர்கள் RS. அம்ப்ரிஷ் & இசக்கி முத்து ஆகியோரை தேர்வுக்கான சோதனைக்கு அழைத்துள்ளது CSK.
News August 11, 2025
கூலி படத்தில் SK?

ரிலீசுக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், ‘கூலி’ படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் LCU கனெக்ஷனாக புது ரோலில் SK நடித்துள்ளதாகவும் சில நாள்களாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. ஆனால், தற்போது வெளிவரும் செய்திகளின் படி, SK இந்த படத்தில் நடிக்கவில்லையாம். ‘கூலி’ கதைக்கு முன்பு ரஜினியிடம் லோகேஷ் சொன்ன Fantasy கதையில்தான், SK நடிப்பதாக இருந்ததாம்.