News August 11, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.10) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News August 11, 2025
சேலம் வழியாக காரைக்குடிக்கு சிறப்பு ரயில்கள்!

பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக ஹூப்ளி-காரைக்குடி-ஹூப்ளி சிறப்பு ரயில்கள் (07331/07332) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.14- ஆம் தேதி ஹூப்ளியில் இருந்து காரைக்குடிக்கும், மறுமார்க்கத்தில், ஆக.15- ஆம் தேதி காரைக்குடியில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
News August 11, 2025
சேலம்: மின் பிரச்னையா? ஒரு மெசேஜ் போதும்!

சேலம் மக்களே…, உங்கள் பகுதியில் மின் தடை, முறைகேடு, சிரமம், அதீத கட்டணம் போன்ற மின்சாரம் சார்ந்த எவ்விதப் பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க வாட்ஸாப் எண் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதுபடி, மேல் கண்ட எந்த வகையான மின்சார பிரச்னைகளுக்கும் 9445851912 எனும் எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். இதை உடனே SHARE பண்ணுங்க!
News August 11, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் – சேலம் சரகத்தில் 5,300 பேர் பயன்

சேலம் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட ‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ முகாமில் சுமார் 5,300 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில் 1,436 பேர் பயனடைந்துள்ளனர். நோயாளிகளுக்கு தேவையான இலவச மருத்துவ பரிசோதனைகளுடன் சிகிச்சையையும் மருத்துவர்கள் அளித்தனர்.