News August 10, 2025
பாம்பன் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த எம்எல்ஏ

பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை கள் சிறை பிடிக்கப்பட்ட இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரை இன்று (ஆகஸ்ட் 10) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சந்தித்தார். அப்போது, முதல்வரிடம் கொண்டு சென்று, விடுதலை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
Similar News
News August 13, 2025
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

(12.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
News August 12, 2025
ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு

ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்து மின்சார ரயில்களும் திருச்சி மற்றும் மதுரையில் டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டு பின் அனுப்பப்படுகிறது. தற்போது ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே பாதையில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேரடியாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.