News August 10, 2025

தருமபுரி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருட்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க புதிய வழிகளை அறிவித்துள்ளார். 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 94981 10581 மற்றும் 63690 28922 ஆகிய வாட்ஸ்அப் எண்கள், மற்றும் ‘DRUG FREE TN’ என்ற மொபைல் செயலி மூலம் எந்த புகார்களை அளிக்கலாம். புகார் அளித்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 11, 2025

கார் மோதி விவசாயி பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி மஞ்சவாடி பகுதியைச் சேர்ந்த 48 வயது விவசாயி குப்புசாமி, டிவிஎஸ் எக்செல் வாகனத்தில் சென்றபோது, கார் மோதி படுகாயமடைந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 10, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக A. சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி கண்ணன் , அரூர் வசந்தா , பென்னாகரம் குமரவேல் பாண்டியன், மற்றும் பாலக்கோடு வெங்கட்ராமன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

தருமபுரி மாவட்டத்தில் 23.380 கிலோ கிராம் கஞ்சா அழிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில், கஞ்சா தொடர்பாக 151 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 93.432 கிலோ கஞ்சா, ஒரு கார், 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவில் 23.380 கிலோ கஞ்சா நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!