News August 10, 2025
ஒரே நேரத்தில் கடலில் இறங்கும் இந்தியா, பாக் படைகள்

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் கடற்படைகள், ஒரே நேரத்தில் அரபிக்கடலில் போர்ப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 11, 12 தேதிகளில் இருநாட்டு கடற்படைகளும், 60 கடல்மைல் தொலைவில் இப்பயிற்சிகளை மேற்கொள்ளும். ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாக்., எல்லையருகே இந்திய கடற்படை நடத்தும் முதல் பயிற்சி இதுவாகும். எனினும், இது வழக்கமானது தான் எனக் கூறப்படுகிறது.
Similar News
News August 11, 2025
பயணத்தை முழுசா என்ஜாய் பண்ண… இத செய்யுங்க

புதிய இடங்களை சுற்றிப் பார்ப்பது, அந்த இடங்களின் கலாசாரத்தை அறிவது, க்ளைமேட்டை அனுபவிப்பது என்பதுதான் பெரும்பாலானவர்களின் சுற்றுலா பயணத்தின் நோக்கமாக இருக்கும். ஆனால், அதற்கென்று புறப்பட்டுவிட்ட பின்னர், ‘அங்கு சாப்பாடு சரியாக கிடைக்கல, மொழி புரியல….” இப்படி சொல்லி ஒட்டாமல் இருந்தால் எப்படி? எந்த ஊருக்கு போகிறீர்களோ, அந்த ஊர்க்காரராக மாறுங்கள். அப்போதுதான் பயணத்தை நன்கு அனுபவிக்க முடியும்.
News August 11, 2025
ராசி பலன்கள் (11.08.2025)

➤ மேஷம் – உயர்வு ➤ ரிஷபம் – நட்பு ➤ மிதுனம் – வெற்றி ➤ கடகம் – பயம் ➤ சிம்மம் – பகை ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – தெளிவு ➤ விருச்சிகம் – ஆதரவு ➤ தனுசு – உறுதி ➤ மகரம் – பெருமை ➤ கும்பம் – பொறுமை ➤ மீனம் – ஓய்வு.
News August 11, 2025
கோவையில் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

கள ஆய்வு செய்வதற்காக கோவை சென்ற CM ஸ்டாலினுக்கு, திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நாளை காலை கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டையில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்க உள்ளார். தொடர்ந்து, பொள்ளாச்சியில் Ex CM காமராஜர், வி.கே.பழனிசாமி, சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரது உருவச்சிலைகளை திறந்து வைக்கவுள்ளார். CM வருகையையொட்டி 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.