News August 10, 2025

கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள தனித்துவமான கோயில்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோயில். இங்குள்ள மூலவரான அர்த்தநாரீஸ்வரர், பாதி சிவன் மற்றும் பாதி பார்வதி என ஒரே சிலையில் காட்சியளிக்கிறார். சிவனின் வலதுபுறமும், பார்வதியின் இடதுபுறமும் ஒரே சிலையில் அமைந்திருப்பது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு தனித்துவமான அம்சமாகும். இங்கு வழிபட்டால் மகிழ்ச்சியும், திருமணத் தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர்!

Similar News

News August 10, 2025

இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.08.2025) இரவு 10 மணி முதல், நாளை திங்கள் கிழமை (11.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை பொதுமக்கள் அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News August 10, 2025

கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 10, 2025

கள்ளக்குறிச்சி மக்களே ரயில்வேயில் சூப்பர் வேலை

image

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!