News August 10, 2025

சிக்கன் சாப்பிட்டால் ஆபத்து?

image

சிக்கன் இறைச்சியை ஆற்றல் தரும் பவர்ஹவுஸ் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சிக்கன் சாப்பிடுவதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும்: உங்கள் எலும்புகளும் தசைகளும் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும். மனநிலை சீராகும். அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் கொலஸ்டிராலும், உடல் பருமனும் அதிகரிக்கும். சிலருக்கு அலர்ஜி, இன்பெக்‌ஷன், ஹார்மோன் பிரச்னைகளும் ஏற்படலாம்.

Similar News

News August 13, 2025

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

image

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்று மாலை 1:54 மணிக்கு, நிலத்தின் அடியில் 39 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தோனேசியாவில் 4.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

News August 13, 2025

ஆகஸ்ட் 13: வரலாற்றில் இன்று

image

*1926 – புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் பிறந்த தினம்.
*1952 – நடிகர், இயக்குநர் பிரதாப் போத்தன் பிறந்த தினம்.
*1963 – நடிகை ஸ்ரீதேவி பிறந்த தினம்.
*1969 – நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள் நியூயார்க் நகரில் வெற்றி ஊர்வலம் வந்தனர்.
*2004 – 28-வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஏதென்ஸில் ஆரம்பமாயின.

News August 13, 2025

ஹிமாச்சலில் 229 பேர் பலி: சேத மதிப்பு ₹2000 கோடி

image

ஹிமாச்சலில் பருவமழை மற்றும் விபத்துகளால் 229 பேர் பலியாகியுள்ளனர். இதில் நிலச்சரிவு, வெள்ளம், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 119 பேரும், சாலை விபத்துகளில் 110 பேரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 395 சாலைகள், 669 டிரான்ஸ்பார்மர்கள், 529 குடிநீர் திட்டங்கள் சேதமடைந்திருப்பதாகவும், மாநிலத்தின் மொத்த பொருளாதர இழப்பு சுமார் ₹2,007.4 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!