News August 10, 2025

ராமநாதபுரத்தில் சுய வேலைவாய்ப்புக்கு பயிற்சி

image

இந்த சுய வேலைவாய்ப்பு பயிற்சியானது தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மூலம் வழங்கப்படுகிறது. 7 நாட்கள் பயிற்சி வகுப்பு. கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை சார்ந்த சுற்றுலா மேம்படுத்தப்பட்டு வரும் சூழலில், இந்த பயிற்சி உதவியாக அமையும். இதன்மூலம், படகு ஓட்டுநர் உரிமத்திற்கு தகுதி பெறலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். *SHARE* பண்ணுங்க.

Similar News

News August 13, 2025

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

(12.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

ராமநாதபுரம்: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

News August 12, 2025

ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு

image

ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்து மின்சார ரயில்களும் திருச்சி மற்றும் மதுரையில் டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டு பின் அனுப்பப்படுகிறது. தற்போது ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே பாதையில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேரடியாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!