News August 10, 2025
திருவள்ளூர்: 10th முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <
Similar News
News August 13, 2025
திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில், மழைக்காலம் தொடங்கிவிட்டதால், நீர்நிலைகளில் குழந்தைகள் குளிப்பதையோ, விளையாடுவதையோ தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. நீர்நிலைகளின் அருகில் குழந்தைகளை தனியே விட வேண்டாம் எனவும், பாதுகாப்பில் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 13, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News August 12, 2025
பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்த நபர் கைது

பூந்தமல்லி, நசரத்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் மிரட்டி நிர்வாணமாக வீடியோ எடுத்தும், நகைகளைப் பறித்தும் சென்ற வழக்கில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அஜய்குமார், கொள்ளையடித்த நகைகளை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.