News August 10, 2025
Online Shopping-ஆல் வரும் நோய்.. எச்சரிக்கும் டாக்டர்கள்!

டிஜிட்டல் உலகில் எது தேவை என்றாலும், ஆன்லைன் ஷாப்பிங் தான். ஆனால், அதனால், Compulsive Buying Disorder (CBD) என்ற மனநல பிரச்னை வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்றவை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், நீண்ட நேரம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதால் கழுத்து வலி, முதுகு வலி, கண் பிரச்னை போன்றவையும் ஏற்படலாம். எனவே, உஷாரா இருங்க!
Similar News
News August 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 426 ▶குறள்: எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. ▶ பொருள்: உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
News August 13, 2025
3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் முயற்சியின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் ₹10.32 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் போதிய இடவசதி கிடைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்காத அளவில் IT பூங்கா கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
News August 13, 2025
கவர்ச்சி கேரக்டர்களுக்கே அழைக்கிறார்கள்: பூஜா

இந்தி சினிமாவில் தன்னை கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அழைப்பதாக நடிகை பூஜா ஹெக்டே வேதனை தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் தான் நடித்த படங்களை அவர்கள் பார்க்கவில்லை என தான் நினைப்பதாகவும் கூறினார். ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாப்பாத்திரமாக தன்னை மாற்றிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்க்கு இந்த இடத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.