News August 10, 2025
பட்டாசு விபத்து எதிரோலியால் போலீசார் அதிரடி நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக பட்டாசு பதுக்கல் மற்றும் மூலப்பொருட்களை எடுத்து செல்லுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக மாவட்டம் முழுவதும் சட்டவிரோத பட்டாசு குறித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
திருட்டு வழக்கில் வடமாநில இளைஞர்கள் கைது

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பட்டமுத்து. இவர் தனது மனைவியுடன் சென்னை செல்வதற்காக கடந்த 10-ம் தேதி ஆம்னி பேருந்தில் வந்தபோது அழகாபுரியில் உள்ள ஹோட்டலில் இரவு உணவுக்காக பேருந்து நின்றுள்ளது. உணவு சாப்பிட்டு விட்டு, வந்து பார்த்த போது கைப்பையில் இருந்த தங்க நகை திருடு போனது.நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த அப்பாஸ்கான்,அக்ரம்கான், மோலா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
News August 12, 2025
விருதுநகர்: தலையாரி வேலைக்கு விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க ஆக.19 அன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <
News August 12, 2025
விருதுநகரில் கஞ்சா விற்ற 266 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் 20205-ம் ஆண்டில் கஞ்சா விற்றவர்கள் மீது 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 266 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.6,89,100 மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோல் குட்கா விற்றதாக 1158 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1230 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.24,11,297 மதிப்புள்ள புகையிலை பொருட்கள், ரூ.30,65,970 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.