News August 10, 2025

மருத்துவ முகாமை தொடங்கி வைத்த மேயர்

image

சென்னை புறநகர் பகுதிகளில் பெருநகர மாநகராட்சி தனியார் அமைப்புகளுடன் இணைந்து, இலவச மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள பேருந்து நிலையம் அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமை மேயர் பிரியா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இம்முகாமில் காய்ச்சல், சளி மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Similar News

News August 13, 2025

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இங்கு போங்க

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட்.13) தண்டையார்பேட்டை, மணலி, தேனாம்பேட்டை ஆகிய பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஆக.12) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

News August 12, 2025

சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்த பெண்

image

சென்னை ஐகோர்ட்டில் இன்று ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையில் சிறுமியை காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் அதிருப்தி அடைந்த சிறுமி ஐகோர்ட் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!