News August 10, 2025
கிருஷ்ணகிரி கிரிக்கெட் ரசிகர்கள் குஷி!

பெங்களூரை விட ஓசூருக்கு அருகில் கர்நாடகாவின் புதிய கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளதால் தமிழக ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 1650 கோடி ரூபாயில் பொம்மசந்திராவில் கட்டப்படும் இந்த மைதானம் 80000 பேர் அமரக்கூடியது. ஓசூரில் இருந்து வெறும் 19 கிமீ தூரம் என்பதால் தமிழ்நாட்டிலிருந்து அரை மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால் பெங்களூரில் இருந்து 25 கிமீ, விமான நிலையத்திலிருந்து 80 கிமீ தூரம் உள்ளது.
Similar News
News August 13, 2025
கிருஷ்ணகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கிருஷ்ணகிரியில் இன்று (13/08/2025) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஊத்தங்கரை, ஓசூர், கெலமங்கலம், தளி, காவேரிப்பட்டினம் & கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறுகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம்.
News August 12, 2025
கிருஷ்ணகிரி எழுந்த சர்ச்சை!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரிக்கு நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் புரப்புரையை மேற்கொள்ள வந்தார். அப்போது பள்ளி மாணவர்கள் சீருமையில் கழுதில் பாஜக துண்டு அணிவித்து நிற்க வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 12, 2025
கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சி…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி – ஜூன் வரை கிருஷ்ணகிரியில் 5,214 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. உங்கள் பகுதியில் நாய் தொல்லை இருந்தால் உடனே கிருஷ்ணகிரி நகராட்சி அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். SHARE IT