News August 10, 2025
நாளை தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை திறன் மேம்பாட்டு துறை சார்பில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நாளை(ஆகஸ்ட்.11) பிரதமரின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இதுவரை அரசு மற்றும் தனியார் ஐடிஐ களில் தேர்ச்சி பெற்று தொழில் பயிற்சி பெறாதவர்கள் கலந்து கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். *ஷேர்*
Similar News
News August 12, 2025
விநாயகர் கோவிலில் பிரதோஷம் எங்கு தெரியுமா?

பிரதோஷம் என்றால் சிவாலங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ள ஆயிரத்தென் விநாயகர் கோவிலில் சுவாமி,அம்பாள் சந்நிதி இருந்தாலும் இங்கு விநாயகப் பெருமானே ஆட்சி புரிவதால், பிரதோஷத்தன்று விநாயகருக்கும், மூஷிகருக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்று மூஷிக வாகனத்தில் பிரதோஷநாதராக பிரதோச விநாயகமூர்த்தி கிரிவலம் வருவார்.
News August 12, 2025
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.14 அன்று காலை 10 மணிக்கு கோரம்பள்ளம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., டிரைவர், கணினி பயிற்சி தகுதியுள்ளோர் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
தூத்துக்குடி பெண்களே டவுன்லோடு பண்ணிக்கோங்க..!

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். <