News August 10, 2025
அடிப்படை வசதிகள் செய்து தர அறிவுறுத்தல்

பூம்புகார் வன்னியர் சங்க மகளிர் மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இரட்டை அடுக்கு தடுப்புகள் அமைத்தல்,மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளது.
Similar News
News August 13, 2025
தொடர் மதுவிலக்கு குற்றங்கள் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம்

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் சீர்காழி போலீசார் கடந்த ஜூலை 22 ஆம் தேதி சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர். இவர் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் எஸ் பி அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடுப்பு காவல் சட்டத்தில் ராஜ்குமாரை கைது செய்து இன்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
News August 12, 2025
மயிலாடுதுறை: உங்களுக்கு அடிக்கடி Fine வருதா?

மயிலாடுதுறை மக்களே உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
News August 12, 2025
தாயுமானவர் திட்டம் தொடங்கி வைத்த ஆட்சியர்

மயிலாடுதுறை, தரங்கம்பாடி வட்டம் கீழையூர் கிராமத்தில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 18 வயதிற்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரசு அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.