News April 7, 2024

6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

ம.பி, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடக்கு கோவா-ரமாகாந்த் கலாப், தெற்கு கோவா-கேப்டன் விரியாடோ பெர்னாண்டஸ், ம.பி மாநிலம், மொரீனா- சத்யபால் சிங் சிகார்வார், குவாலியர்- பிரவீன் பதக், கந்த்வா- நரேந்திர படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், தாத்ரா-நாகர்ஹவேலியில் அஜித் ராம்ஜிபாய் மகலாவை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.

Similar News

News March 19, 2026

உளுந்தூர்பேட்டை யாருக்கு?

image

திமுக கூட்டணியில் விசிக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே திமுக வசம் உள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியைக் கைப்பற்றுவதில் கூட்டணி கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், உளுந்தூர்பேட்டையில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 19, 2026

இழுபறிக்கு இப்படி ஒரு காரணமா?

image

புதிய தமிழகம் கட்சி மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய இசைவு தெரிவித்துள்ளது. ஆனால், கிருஷ்ணசாமி வைத்த நிபந்தனைகளால் சற்று குழப்பம் அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு 4 சீட்டுகள் வேண்டும். தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான சந்தன பிரியாவுக்கு MLA சீட்டுக் கொடுக்கக் கூடாது என கூறியதால் EPS அப்செட்டில் உள்ளதாக சொன்னாராம்.

News March 19, 2026

காலை நடைபயிற்சியில் இத்தனை நன்மைகளா?

image

ஆரோக்கிய வாழ்வுக்கு வலுசேர்க்கும் எளிமையான உடற்பயிற்சியில் நடைபயிற்சி முக்கியமானது. அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா? *இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். *மூளை செயல்பாடுகளை தூண்டி, மனக்குழப்பங்களை நீக்கும். *ஊக்க மனநிலையை இயற்கையாக உயர்த்தும் எண்டோர்பின்களை வெளியிடும். *குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும். *தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, அதில் ஒழுங்குமுறையை கொண்டுவரும்.

error: Content is protected !!