News August 10, 2025
ஏன் கோயிலுக்கு சென்றால் சில நேரங்கள் அமர வேண்டும்!

சிவன் கோயிலுக்கு சென்றால், சில நிமிடமாவது அமர்ந்துவிட்டு வரவேண்டும். காரணம், சிவன் கோவிலில் இருந்து எதையுமே வீட்டுக்கு கொண்டு வரக் கூடாது என்பதால், சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு புறப்பட வேண்டும். ஆனால், பெருமாள் கோயிலுக்கு சென்றால், நேரடியாக வீட்டுக்கு வந்துவிடலாம். காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்கினால், வருமானம் அதிகரித்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். SHARE IT.
Similar News
News August 12, 2025
ரஷ்யாவுக்கு அலாஸ்காவை தாரைவார்த்த டிரம்ப்?

அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணம் தான் அலாஸ்கா. ஆனால், பிரஸ்மீட்டில் டிரம்ப் செய்த ஒரு தவறால் அலாஸ்கா ரஷ்யாவுக்கு கொடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆக.15-ல் அலாஸ்காவில் டிரம்ப்-புடின் சந்திப்பு நடக்கவுள்ளது. இதுபற்றி டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேட்டியளித்தபோது, புடினை அலாஸ்காவில் சந்திக்கவுள்ளேன் என கூறுவதற்கு பதில் ரஷ்யாவில் சந்திக்கவுள்ளேன் என கூறியிருக்கிறார்.
News August 12, 2025
BREAKING: மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கைது

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை போலீசார் கைது செய்துள்ளனர். மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் சிக்கிய இவரை கடந்த மே மாதம் திமுகவில் இருந்து நீக்கி துரைமுருகன் நடவடிக்கை எடுத்திருந்தார். அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 17-வதாக பொன்வசந்த் சிக்கியுள்ளார். இவர் அமைச்சர் PTR-க்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
News August 12, 2025
பட்டாவில் நில அளவு மாறுபட்டால் என்ன செய்வது?

சொத்து வாங்கும்போது விற்பனை பத்திரம் (sale deed), பட்டா மிக முக்கியம். இந்த இரண்டிலும் நில அளவு மாறுபட்டால், சர்வேயரை வைத்து நிலத்தை அளக்க வேண்டும். பட்டாவில் மாறுபாடு இருந்தால், உரிய ஆவணங்களுடன் தாலுகா ஆபிஸ் (அ) இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பத்திரத்தில் மாறுபாடு இருந்தால் சற்று சிக்கல். விற்பவர், வாங்குபவர் சம்மதத்துடன் பிழை திருத்த பத்திரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.