News August 10, 2025
தென்காசி: பேருந்து தொடர்பாக புகார் அளிக்க.!

தமிழ்நாடு அரசின் விடியல் பேருந்து திட்டத்தில் எத்தனையோ பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பெண்களை இழிவாக நடத்துவதும், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பொது மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா 1800 599 1500 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். அல்லது 149 என்ற எண்ணிற்கும் அழைக்கலாம்.
Similar News
News August 13, 2025
திருக்குற்றநாதர் கோவிலில் பொது விருந்து

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட திரு குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பகல் 12:30 மணி அளவில் சிறப்பு வழிபாடும் அதனைத் தொடர்ந்து பொது விருந்து நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொள்ள திரு குற்றாலநாதர் கோவில் உதவி ஆணையர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News August 12, 2025
தென்காசி: கிராமங்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் இக்கிராம சபைக் கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News August 12, 2025
தென்காசி வழியாக செல்லும் புதிய ரயில்கள் குறித்து அறிவிப்பு

தென்காசி வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆக.17 மாலை 4.20மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக ஆக.18 மதியம் 12.30க்கு பெங்களூரு சென்று சேரும். மேலும், ஆகஸ்ட் 18 மதியம் 2.15மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.15மணிக்கு நெல்லையை சென்றடையும்.