News August 10, 2025
‘உஜ்வாலா’ GAS மானியத்தில் மாற்றம் செய்த மத்திய அரசு

உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டருக்கான மானியம் இனி 9 மாதங்களுக்கு மட்டுமே தலா ₹300 வழங்கப்படவுள்ளது. 2023 அக். மாதம் முதல் மாதந்தோறும், 12 மாதங்களுக்கு தலா ₹300 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 9 மாதங்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். 2025 – 2026 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ₹12,060 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10.33 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருவது கவனிக்கத்தக்கது.
Similar News
News August 12, 2025
ஐசிசி விருதை தட்டித் தூக்கிய கில்(லி)..!

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி விருது வழங்கி வருகிறது. ஜூலைக்கான விருதை இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் வென்று அசத்தியுள்ளார். கடந்த மாதத்தில் மட்டும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 567 ரன்கள் குவித்திருந்தார். கேப்டனாக செயல்பட்டு இந்த விருதினை முதல் முறை வென்றது மிகவும் சிறப்பானது எனவும் இங்கிலாந்து தொடர் வாழ்வில் நிறைய கற்றுக் கொடுத்துள்ளதாகவும் கில் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை: EPS

மேற்கு மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்பதை ஸ்டாலின் உணர வேண்டும் என EPS கூறியுள்ளார். நேற்று திருப்பூரில் பேசிய ஸ்டாலின், அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் எனக் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி பரப்புரையில் பேசிய EPS, 2021 தேர்தலில் 10 தொகுதிகளிலும் வென்று கோவையில் ஆளுங்கட்சியாக அதிமுக உள்ளதை ஸ்டாலின் மறக்க வேண்டாம் என்றார். உங்கள் கருத்து?
News August 12, 2025
மொபைல் பேங்கிங் யூஸ் பண்றீங்களா.. நோட் திஸ்!

70% வங்கிகளின் Mobile banking App-களில் SSL(Secure Sockets Layer) சான்றிதழ் இல்லை என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. SSL இல்லாத App-கள் எளிதில் ஹேக் செய்யப்படும். அதே போல Phishing, Spoofing போன்ற வழிகளிலிலும் தகவல்கள் திருடப்படுகின்றன. இதிலிருந்து தப்பிக்க,
◈அங்கீகரிக்கப்படாத வலைத்தளங்கள் தவிர்க்கவும்.
◈SSL சான்றிதழ் இல்லாத App-களை தவிர்க்கவும்.
◈பொது Wifi-ல் Mobile banking-ஐ பயன்படுத்த வேண்டாம்.