News August 10, 2025
திருவள்ளூர்: கோயில் ஊழியர்களை தாக்கிய இளைஞர்கள்!

திருத்தணி முருகன் கோயிலுக்கு வடபழனியை சேர்ந்த இளங்கோ (22), ஸ்ரீராம் (24) ஆகியோர் தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது, கோயில் ஊழியர்கள் பாலாஜி, ரமேஷ் தங்களுக்கு வேண்டியவர்களை மூலவர் சன்னிதி உள்ளே அனுப்பி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, இளங்கோ, ஸ்ரீராம் தங்களையும் உற்சவர் சன்னிதிக்குள் அனுமதிக்க வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கினர். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
திருவள்ளூரில் இன்று கரண்ட் கட்!

பொன்னேரி & துரைநல்லூர் துணைமின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 13) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. திருமழிசை, சிட்கோ தொழிற்பேட்டை, குத்தம்பாக்கம், நேமம், குண்டுமேடு, உடையார்கோயில், பிராயம்பத்து, கொத்தியம்பாக்கம், பாரிவாக்கம், சோம்பட்டு, பணப்பாக்கம், துரைநல்லூர், ராளம்பாடி &அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்!
News August 13, 2025
திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில், மழைக்காலம் தொடங்கிவிட்டதால், நீர்நிலைகளில் குழந்தைகள் குளிப்பதையோ, விளையாடுவதையோ தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. நீர்நிலைகளின் அருகில் குழந்தைகளை தனியே விட வேண்டாம் எனவும், பாதுகாப்பில் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழிப்புடன் இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 13, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (ஆகஸ்ட் 12) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.